கிறிஸ்து உயிர்த்தார்!
பிரியமான சகோதர, சகோதரிகளே!
உயிர்த்த இயேசுவின் பெயரில் அன்பின் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
“நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர்” (திருப்பாடல்கள் 68,20) என்ற இறைவார்த்தையின்படி அவரே விடுதலை தரும் ஆண்டவர். மனித வாழ்வின் கடைசி நிலையான இறப்பினின்றும் விடுதலை தர வல்லவர். ஆகவே நாம் அனைவரும் வாழ்கின்ற ஒவ்வொரு வினாடியும் விடுதலை நாயகராம் அவரை பற்றிக் கொண்டு வாழ்வோம். விடுதலை நிச்சயம்.
ஆண்டவர் தாமே உங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
என்றும் உங்களுக்காக ஜெபிக்கக் காத்திருக்கும்
உங்கள் சகோதரர்கள்,
கொய்னோனியா ஜான் தி பாப்டிஸ்ட்,
கிருஷ்ணகிரி.